நிகழாண்டில் விவசாயிகளுக்கு ரூ.276 கோடி பயிர்க்கடன்

திருச்சி மாவட்டத்தில்  விவசாயிகளுக்கு நிகழாண்டில் ரூ.276 கோடி பயிர்க்கடன் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை ரூ.160 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி.
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில்  விவசாயிகளுக்கு நிகழாண்டில் ரூ.276 கோடி பயிர்க்கடன் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை ரூ.160 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வெள்ளூரில் புதன்கிழமை நடைபெர்ற  சிறப்பு மனுநீதி  நிறைவு நாள் விழாவில், 1112 பயனாளிகளுக்கு ரூ.62.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மேலும் அவர் பேசியது: பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், விவசாயிகள், வறுமையில் வாடுபவர்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. 
இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை அதிகமாகவும், வடகிழக்குப் பருவமழை குறைவாகவும் பெய்துள்ளது. இருப்பினும் இருக்கும் நீர் ஆதாரத்தைக் கொண்டு ஓரளவிற்கு சாகுபடி  செய்யப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.276 கோடி பயிர்க்கடன் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை ரூ.160 கோடி பயிர்க்கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளூர் கிராமத்திலுள்ள 8 குக்கிராமப் பகுதிகளுக்கு ரூ.20 லட்சம் செலவில் ஒரு மாதக் காலத்துக்குள் சாலைகள் அமைத்துத் தரப்படும். ஆணைப்பட்டி கிராமத்தில் 15 நாள்களுக்குள் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்து தரப்படும் என்றார் ஆட்சியர்.
முகாமில் ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் க.பாபு, வேளாண் இணை இயக்குநர் எஸ்.எம். உதுமான் முகைதீன்,  சுகாதாரத் துறை இணை இயக்குநர் சம்சாத் பேகம்,  வருவாய்க் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சாந்தி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பாலாஜி  உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com