மரபணு மாற்ற விதைகளுக்கு தடை கோரி குமரி முதல் கோட்டை வரை நடைபயணம்

மரபணு மாற்ற விதைகளுக்கு தடைவிதிக்கக் கோரி கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரையில் 100 நாள்களுக்கு விவசாயிகள் விழிப்புணர்வு
Updated on
1 min read

மரபணு மாற்ற விதைகளுக்கு தடைவிதிக்கக் கோரி கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரையில் 100 நாள்களுக்கு விவசாயிகள் விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கவுள்ளதாக தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பி. அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: 
மரபணு மாற்றம் ஊக்குவிக்கப்பட்டதால் உணவுப் பொருள்கள் அனைத்தும் கலப்படமாக மாறிவிட்டன. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.  
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், விவாசயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் குமரி முதல் கோட்டை வரை பிரசார பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கி 100 நாள்களுக்கு 32 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்துவிட்டு கோட்டையில் அரசிடம் முறையிடும் மனு அளிக்கவுள்ளோம். இதில், தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் மட்டுமின்றி அந்தந்த மாவட்ட விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர் என்றார் அவர்.

சுற்றுப்பயண விவரம்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் வியாழக்கிழமை காலை பயணம் தொடங்குகிறது. இதில், விவசாயிகள் ஒரு லாரி, 3 சிறிய சரக்கு வாகனம் (குட்டி யானை), இருக்கைகளுடன் கூடிய வேன் மற்றும் மேளதாளத்துடன், மைக் பொருத்தப்பட்டு நடைபயணமாக செல்கின்றனர். இந்த பயணத்தின்போது சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போக்குவரத்துக்கு இடையூறு, பொதும்ககளுக்கு இடையூறு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என விவசாயிகள் சங்கத்தின் சார்பில் எழுத்துப்பூர்வமாக காவல்துறைக்கு உறுதிமொழியளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநதாபுரம், சிவகங்கை, தேனி, மதுரை,  திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக இதர மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com