தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாடக்குடி கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

லால்குடி அருகே மாடக்குடியில் பூட்டிக் கிடக்கும் கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :14 மே 2018, 10:28 pm

DIN

லால்குடி அருகே மாடக்குடியில் பூட்டிக் கிடக்கும் கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மாடக்குடி ஊராட்சியில், 2014-15ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.14.43 லட்சம் செலவில் கிராம சேவை மையம் கட்டும் பணி தொடங்கியது. இந்த மையத்தில் கழிவறை, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பூட்டிக்கிடக்கும் சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட போது, கணக்குகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு
தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.