திருச்சி மாவட்டம், சிறுகனூரில் அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்தவரை அவமதித்த வன்கொடுமையைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறுகனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ், அதே கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல்- வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக முத்துவுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செயல்பட்டதாகவும், கடந்த மாதம் 28 ஆம் தேதி சிறுகனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடைபெற்ற பிரச்னையின் போது, துரைராஜை அவமதித்து வன்கொடுமையில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட
புகாரின் பேரில் சிறுகனூர் போலீஸார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
இதை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் வடக்கு மாவட்டச் செயலர் மண்ணை இரா. இளங்கோ தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் ஆதிசக்தி முன்னிலை வகித்தார்.
ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலர் ஆ. நாகராசன் கண்டன உரையாற்றினார். மாநிலத் துணைப் பொதுச் செயலர் செங்கை குயிலி, பழநி.சிவா, மாநிலப் பொறியாளர் அணிச் செயலர் எழில்புத்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேல்விஷாரம் வால்மீகிஸ்வரா் கோயில் பிரதோஷ வழிபாடு

1.5.1976: மொழித் திணிப்புக்கு பிரதமர் இந்திரா காந்தி எதிர்ப்பு!

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை

நாச்சியாா்கோவில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

