மணப்பாறை அருகேயுள்ள ஆளிப்பட்டியில் உள்ள அதிகார விநாயகர், அழகு முத்துமாரியம்மன், கருப்பசுவாமி கோயில் திருவிழாவையொட்டி படுகளம் ஓடுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா மே 13-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மன், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான கரகம் பாலித்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. அதனையொட்டி அம்மன் பல்லக்கில் எழுந்தருளி விதியுலா வந்தார்.
அதைதொடர்ந்து திங்கள்கிழமை காலை அம்மன், சுவாமிக்கு பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். மாலை படுகளம் ஓடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குதிரை குத்திப்பட்டி, மாகாளிபட்டி, கரும்புலி பட்டி உள்ளிட்ட கிராம மக்களும் கலந்து கொண்டனர். செவ்வாய்க்கிழமை காலை முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஸ்டார் பாய்ஸ் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

