பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கோப்பையை வென்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி சாரநாதன் பொறியியல் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 14 பள்ளி அணிகள் பங்கேற்ற போட்டியில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மற்றும் கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவை இறுதி போட்டிக்கு விளையாட தகுதி பெற்றன.
இறுதி போட்டியில் முதலில் விளையாடிய கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி 25 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 24.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த எஸ். சூர்ய நாராயணன் பேட்டிங்கில் 52 ரன்களும், கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளியை சேர்ந்த எம். முஹில் ஆதித்யன் 40 ரன்களும், பந்து வீச்சில் பி. ஷிவ் நரேன் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கே. வெங்கடேஷ், நிர்வாக குழு உறுப்பினர் கே. குரு ராகவேந்திரன், கிரிக்கெட் பயிற்சியாளர்கள் ஆர். ராஜா சீனிவாசன், கே. பி. கார்த்திக் ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செருப்பைத் திருடிய டெலிவரி ஊழியர்
நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


