மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள்

திருச்சி மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் பிஎஸ்ஆர் அறக்கட்டளை சார்பில் புத்தூரில் நடைபெற்ற விழாவுக்கு

Updated On :5 நவம்பர் 2018, 9:16 am IST

திருச்சி மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் பிஎஸ்ஆர் அறக்கட்டளை சார்பில் புத்தூரில் நடைபெற்ற விழாவுக்கு மனிதம் சமூகப்பணி மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜி.ஆர்.தினேஷ்குமார் தலைமை வகித்தார். பிஎஸ்ஆர் அறக்கட்டளை செயலாளர் டி.குணசீலன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோரை இழந்த மாணவ, மாணவியர், ஈழத்தமிழர் குழந்தைகள் என சுமார் 200 பேருக்கு தீபாவளி புத்தாடைகளைவழங்கினார். 
தேசியக் கல்லூரியின் உடற்கல்வி ஆராய்ச்சி துறைத் தலைவர் மற்றும் இயக்குநர் டி.பிரசன்ன பாலாஜி, நடிகர் வாளாடி கார்த்திக், பிஎஸ்ஆர் அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் ஜி.கார்த்திக் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
சாலையோர ஆதரவற்றோருக்கு புத்தாடை: 
திருச்சி டைமண்ட் சிட்டி  குயின்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரயில்வே ஜங்சன், பாரதியார், பாரதிதாசன், பிராமினேட் சாலை, அரசு மருத்துவமனை சாலை போன்ற பகுதிகளில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள், முதியோர் என சுமார் 100 பேருக்கு தீபாவளி புத்தாடைகள், தட்டுகள், தம்ளர், இனிப்புகளை ரோட்டரி மாவட்டம் (3000) மக்கள் தொடர்பு அலுவலரும், ஆடிட்டருமான மோகன், ரோட்டரி சங்கத் தலைவி ஜெயந்தி ராஜ்குமார், செயலாளர் ஜெயஸ்ரீ சுரேஷ், யோகேசுவரி, லலிதா சங்கரன், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.