மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார் மத்திய புலனாய்வுத் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி.
திருச்சி பெல் வளாகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் நிறைவுநாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது: மனித இடையூறுகளைக் குறைப்பதால் பொது வாழ்வில் வெளிப்படைத்தன்மைக் கூடுவதுடன் ஊழலை குறைக்க உதவும். தனி, பொதுவாழ்வில் அவரவர் நடவடிக்கைகளில் நேர்மை, நாணயத்தை வளர்ப்பதில் நிறுவனத்தின் ஊழியர் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இதை உணர்ந்து அவர்கள் பணியாற்ற வேண்டும். இதற்கென மாணவ சமுதாயத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊழலை ஒழிக்க வேண்டும். புதிய இந்தியாவைப் படைக்கவும், ஆர்வத்தை தூண்டும் வகையில் நடவடிக்கைகைளை எடுக்க வேண்டும் என்றார் என்.கிருஷ்ணமூர்த்தி.
திருச்சி பெல், திருமயம் மின்னாலைக் குழாய்கள் பிரிவு மற்றும் சென்னை குழாய்கள் மையத்தின் செயல் இயக்குநர் ஆர்.ராஜா மனோகர் தலைமை வகித்துப் பேசியது: கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை அனுசரிப்பது மக்களிடம் நேர்மை, நாணயத்தின் மீதான நம்பிக்கையை வலுசேர்க்க உதவும். வாடிக்கையாளர்களிடம் வெளிப்படைத்தன்மை, பாரபட்சமற்ற தன்மையுடன் பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றார். பெல் நிறுவனம் சார்பில் பல்வேறு கல்வி நிலையங்களில் ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள், வளாகப் பேரணி, குழு விவாதங்கள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சிபிஐ கண்காணிப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக, கண்காணிப்புத் துறையின் கூடுதல் பொது மேலாளர் எஸ்.தியாகராஜன் வரவேற்றார். துணைப் பொதுமேலாளர் என்.பாஸ்கரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







