எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

குடும்பத் தகராறில் தலை துண்டித்து மனைவி கொலை; கணவர் கைது

திருச்சியில் குடும்பத் தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:57 am IST

திருச்சியில் குடும்பத் தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருச்சி காட்டூர் பிலோமினாள்புரம் முதல்தெருவைச் சேர்ந்த தனிஸ்லாஸ்-சகாயமேரி தம்பதியின் மூத்த மகன்
சங்கர் சகாயராஜ்(30). எல்ஐசி முகவரான இவருக்கும், தஞ்சை மாவட்டம் கீழ திருப்பந்துருத்தியைச் சேர்ந்த பெஞ்சமின்  மகள் ஜெசிந்தா ஜோஸ்பினுக்கும்(26 ) 9
மாதங்களக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சகாயராஜ் தரைத்தளத்தில் தனது மனைவியுடனும், அவரது பெற்றோர் மாடியிலும் வசித்து வந்தனர். 
திருமணமான சில நாள்களில் இருந்து தம்பதியினருக்கிடையே கருக்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஜெசிந்தா ஜோஸ்பின் கோபித்துக் கொண்டு தாய்வீடு செல்வதும், அவரை சங்கர் சகாயராஜ் சமாதானம் செய்து அழைத்து வருவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில் ஆடி அழைப்புக்காக தாய்வீடு சென்ற ஜெசிந்தா ஜோஸ்பின், தாய்வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இதையடுத்து, பெற்றோரின் ஆலோசனைபடி கடந்த வெள்ளிக்கிழமை (அக்.5) சங்கர் சகாயராஜ் மனைவியை சமாதனப்படுத்தி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை ( அக்.6) இரவு கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் சகாயராஜ் மனைவி ஜெசிந்தா ஜோஸ்பினை அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். பின்னர் கொலை செய்யப்பட்ட மனைவி சலடத்துடன்  இரவு படுத்து உறங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல சர்ச் செல்வதற்காக , மாடியிலிருந்து இறங்கி வந்த சகாயாராஜின் பெற்றோர், ரத்தக் கரையுடன் இருந்த மகனைக் கண்டு பதறி வீட்டினுள் சென்று பார்த்தனர். அங்கு ஜெசிந்தா ஜோஸ்பின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில் திருவெறும்பூர்  காவல்ஆய்வாளர் ஞானவேலன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கர் சகாயராஜ் கைது செய்யப்பட்டார். திருமணமாகி  9 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.  
கைது செய்யப்பட்ட சங்கர் சகாயராஜ் போலீஸாரிடம் கூறுகையில்,
வரதட்சிணையாக அளித்த 7 பவுன் நகையில் இரண்டரை பவுன் நகையை அடகு வைத்ததில் இருந்து பிரச்னை தொடங்கியது. போதிய வருமானம் இல்லாததால் அடகுவைத்த நகையை மீட்க முடியவில்லை. இதற்கிடையில் அடிக்கடி கோபித்துக் கொண்டு தாய்வீடு சென்று விடுவதால் கோபம் அதிகரித்தது. இரு தினங்களுக்கு முன் பெற்றோருடன் சேர்ந்து போய், சமாதானம் செய்து அழைத்து வந்தேன். அதன்பிறகும் தாம்பத்யத்துக்கு ஒத்துழைக்காததால் ஆத்திரத்தில் தலையணையை முகத்தில் அமுக்கினேன். கோபம் அடங்காததால், கத்தி, அரிவாள்மனையால் கழுத்தை அறுத்தும் சாகவில்லை. அதன்பின் அரிவாளால் தலையைத் துண்டித்தேன் எனக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.