தமிழகத்தில் மழையைக் காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: கடந்த 1979 - 80 ஆண்டுகளில் கடும் பனிக்காலத்தில் கூட நாடு முழுவதிலும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் மழை குறித்த வானிலை மையத்தின் அறிவிப்பை காரணம் காட்டி இடைத்தேர்தல் நடத்தவில்லை என்ற அறிவிப்பு ஏற்புடையதல்ல. அதேசமயம், ரெட் அலர்ட் அறிவிப்பு அதிமுகவின் சூழ்ச்சி என்று சொல்ல முடியாது. வானிலை ஆய்வு மைய அறிவிப்புக்கும், தமிழக அரசுக்கும் தொடர்பில்லை. தேர்தல் ஆணையத்துக்கென பல்வேறு அதிகாரங்கள் உள்ளன. ஆனால் இடைத்தேர்தல் அறிவிப்பு தள்ளி வைத்ததற்கான காரணம் தான் ஏற்புடையதாக இல்லை. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எந்தவொரு ஆளுநரும் சொல்லாத ஒரு குற்றச்சாட்டை தற்போதைய ஆளுநர் கூறியிருப்பது இதுதான் முதல் முறை.
தகுந்த விசாரணை நடத்தி அதற்கு காரணமான அமைச்சர்கள் பதவி விலக்கப்பட வேண்டும் என்றார் வைகோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


