கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சீரடி சாயிபாபாவின் புனித பாதுகை,  ஒன்பது காசுகளைத் தரிசித்த பக்தர்கள்

திருச்சி மேக்குடியிலுள்ள சீரடி சாயிபாபாபொது நல வளாகத்தில் சாயி பாபாவின் புனித பாதுகை, ஒன்பது காசுகள்

Updated On :22 அக்டோபர் 2018, 4:14 am

திருச்சி மேக்குடியிலுள்ள சீரடி சாயிபாபாபொது நல வளாகத்தில் சாயி பாபாவின் புனித பாதுகை, ஒன்பது காசுகள் தரிசனம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சத்குரு சீரடி சாயிபாபா வாழ்ந்த காலத்தில், அவருடன் நெருக்கமாகப் பழகி அவருக்கு இறுதிகாலம் வரை பணிவிடை செய்தவர்களில் லட்சுமிபாய் ஷிண்டேயும் ஒருவர். பாபா சீரடிக்கு முதல் முதலாக வந்தபோது அவருக்கு உணவளித்து உபரசித்தவர் லட்சுமிபாய் ஷிண்டே.
பாபா தன் இறுதி காலம் வந்த போது, தன்னிடம் விசுவாசமாக இருந்தவர்களுக்கு நன்றியாக ஏதேனும் செய்ய எண்ணியப் போது,  அச்சமயம் 9 வெள்ளிக்காசுகளை தனது கபினியிலிருந்து எடுத்து லட்சுமிபாயின் கரங்களில் வைத்து தன் பூதவுடலை  நீத்தார். அதன் தெய்வீகத் தன்மையை உணர்ந்து, அந்த வெள்ளிக்காசுகளை  பாதுகாத்து பூஜை செய்து வந்தார். அவ்வாறு பூஜிக்கப்பட்ட வெள்ளிக்காசுகளும்,  சீரடி சாயி பாபாவின் பாதுகையும் மேக்குடியிலுள்ள சாயிபா பொது நல வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
சீரடி சாயிபாபா சமாதி நூற்றாண்டையொட்டி திருச்சி சீரடி சாயி அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வையொட்டி, மேக்குடி சாயிபாபா பொது நல வளாகத்தில் சாயியின் பாதுகையும், 9 காசுகளும் வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி காலையில் பூஜைகள் மகா ஆரத்தியுடன் தொடங்கின.  இப்பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் பாதுகையையும், 9 காசுகளையும் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சீரடி சாயிபாபாவின் பிரசாதம் வழங்கப்பட்டது.  காலை 8 மணிக்குத் தொடங்கிய தரிசனம் இரவு 8 மணி வரை நடைபெற்றது. சுமார் 35,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர். மேலும் அனைத்துப் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கானஏற்பாடுகளை அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலர் காந்திமதி மீனாட்சிசுந்தரம் தலைமையில் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.  மேலும், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்து மேக்குடி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும்,  மணிகண்டம் சாலையிலிருந்து இலவச வாகன வசதியும் செய்யப்பட்டிருந்தது.  காவல்துறை சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.