திருச்சி மாநகராட்சியில் தினமும் வீடுகளில் பெறப்படும் குப்பைகளைக் கண்காணிப்பதற்காக க்யூ.ஆர். கோடு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியின் கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில், 56 ஆவது வார்டுக்குள்பட்ட தில்லைநகர் 11 ஆவது குறுக்குத் தெரு, ஏஆர்ஏ, என்.வி.வி. குயின்மிஸ்ட், வித்தியா, மாருதி வில்லா, ஏ.பி.பி. உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி மக்களிடம் மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் புதன்கிழமை இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியது: மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வார்டுகளிலுள்ள வீடுகளுக்கு விரைவில் தனி க்யூ.ஆர். கோடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு வீடு, வணிக நிறுவனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைத்துக்கும் தனியாக க்யூ.ஆர்.கோடு வழங்கப்படும்.
குப்பைகள் பெறும் வாகனங்களில் வரும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை வீடுகளில் உள்ள க்யூஆர்.கோடு பதிவை ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியில் பதிவு செய்தால் உடனடியாக மாநகராட்சி கணினிக்கு குப்பை சேகரித்த நேரம் பதிவாகிவிடும். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து வழங்கப்படுகிறதா என்ற விவரம் திட்டத்தின் மூலம் வீடுகள், நிறுவனங்களிடமிருந்து தினசரி பெறப்படும். குப்பைகள் வாங்கும் பணி செம்மையாக்கப்படும் என்றார் ஆணையர் ந. ரவிச்சந்திரன். நிகழ்வில், மாநகராட்சி உதவி ஆணையர்கள் பிரபாகரன், தயாநிதி, உதவிச் செயற்பொறியாளர் ரவீந்திரன், சுகாதார அலுவலர் தலைவிரிச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போலி அபராத தகவல்: ரூ.1.21 லட்சத்தை இழந்த பெண்

வீட்டில் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

திருச்சி நீதிமன்றத்தில் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் சோதனை

வையம்பட்டி அருகே வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


