
சிறுகனூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தாய், மகன் புதன்கிழமை உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே ச.புதூரைச் சேர்ந்தவர் மூக்கன்(65). விவசாயியான இவர் தனது மனைவி வசந்தா(54),
மகன் அரவிந்தன்(27) ஆகியோருடன் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உடல்நலம் குன்றிய உறவினரை பார்த்து விட்டு காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
காரை அரவிந்தன் ஓட்டினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகே நெடுங்கூர் பகுதியில் வந்தபோது காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய கார் சாலையில் கவிழ்ந்து.
இதில் அரவிந்தன் நிகழ்விடத்தில் இறந்தார். காயமடைந்த மூக்கன், வசந்தா இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா இறந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூக்கன் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து சிறுகனூர் போலீஸாக் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






