நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

திருவானைக்கா இரணியம்மன் கோயில் காப்புக் கட்டுதல் தொடக்கம்

திருவானைக்கா அருள்மிகு இரணியம்மன் திருக்கோயில் காப்புக் கட்டுதல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:36 am IST

திருவானைக்கா அருள்மிகு இரணியம்மன் திருக்கோயில் காப்புக் கட்டுதல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மன் உபகோயிலான இங்கு  திருவிழா தொடங்கிய பின்னர்தான் மற்ற எல்லைக்  கோயில்களில் திருவிழா தொடங்குவது வழக்கம்.  அனைத்து  சமுதாய மக்களும் ஒன்றுகூடி காப்புக் கட்டி, திருவிழா நடத்தப்பட்ட நிலையில்  பிரச்னைகள் காரணமாக சாமி புறப்பாடு மட்டுமே 1989 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அனைத்து சமுதாய மக்களும் காப்புக் கட்டி திருவிழாவை நடத்த வேண்டும் என்ற நோக்கில்,  இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மன் கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா ஆகியோர் அவர்களை அழைத்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்ட நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து சமுதாய மக்களும் காப்புக் கட்டுதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திருவானைக்கா கோயிலிலிருந்து  செவ்வாய்க்கிழமை இரவு பிடாரி இரணியம்மன் வாண வேடிக்கை,மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று தனது சன்னதியைச் சென்றடைந்தார். அதன் பின்னர் காப்புக்கட்டுதல் நடைபெற்றது.
பிப்.19 ஆம் தேதி இரண்டாம் காப்புக் கட்டுதலும், பிப்.24ஆம் தேதி யானை, 25 ஆம் தேதி குதிரை, 26 ஆம் தேதி பூத வாகனங்களில் இரணியம்மன் புறப்பாடாகி, திருவானைக்கா வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 
பிப்.26 ஆம் தேதி காளி வட்டமும், 27 ஆம் தேதி திருத்தேரில் சாமி எழுந்தளுலும் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.