தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய தொழில்நுட்பக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் பிப்.20ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், திருச்சி, அருணாசலம், ரூர்கேலா, நாக்பூர், சூரத்கல், கோழிக்கோடு, மிஸோரம், ஜலந்தர், சிக்கிம் ஆகிய பகுதிகளில் உள்ள என்ஐடி மாணவர், மாணவிகள் 1,400 பேர் கலந்து கொண்டனர்.
கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் 200 போட்டிகள் நடைபெற்றன.
இதில், கிரிக்கெட் போட்டியில் சூரத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி அணி வெற்றி பெற்றது. இதேபோல, பெண்கள் கைப்பந்து இறுதிப் போட்டியில் ஜலந்தர் அணியை 2-0 என்ற புள்ளி கணக்கில் திருச்சி அணி வீழ்த்தியது. கைப்பந்து ஆடவர் போட்டியில் நாக்பூர் அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் திருச்சி அணி வீழ்த்தியது. கூடைப்பந்து ஆடவர் போட்டியில் ஜலந்தர் அணியை 38-26 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி திருச்சி அணி வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்த போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று திருச்சி என்ஐடி அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
அணி வீரர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் மயில்வாகனன், சனிக்கிழமை இரவு வழங்கி வாழ்த்திப் பேசினார். இதில், கல்லூரி ஆசிரியர்கள், துறைத் தலைவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: 1 டாலர் - ரூ. 95.63! 35 காசுகள் சரிவு!

நீட் தேர்வில் முறைகேடு! ஆயுர்வேத மாணவர் கைது! மாறுவேடத்தில் இருந்தவர்!
சிவகார்த்திகேயன் வரிகளில் வேலும் மயிலும் பாடல்!

ஹன்டா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுமா?
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
