குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பொய்கைபுதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 13 பேர் காயம்: 677 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைபுதுப்பட்டி புனித சந்தியாகப்பர் திடலில் ஞாயிற்றுக்கிழமை

Updated On :25 பிப்ரவரி 2019, 8:59 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொய்கைபுதுப்பட்டி புனித சந்தியாகப்பர் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 677 காளைகள் பங்கேற்றன. போட்டியின்போது, 13 வீரர்கள் காயமடைந்தனர்.  
போட்டியை ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி.ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். வருவாய் வட்டாட்சியர் சித்ரா உடனிருந்தார். 
கோயில் காளைகள் முதலில் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் வந்திருந்த 677 காளைகள்  அவிழ்த்து விடப்பட்டன. காளைகளைத் 
தழுவ 324 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். 
வாடிவாசல் வழியே திமிறி சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். போட்டியில் 6 வீரர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். 
அவர்களில் 12 பேர் முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒரு வீரர் மட்டும் மேல்சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 4 காளைக்கு சிறு காயம் ஏற்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. 
காளைகளைப் பிடித்த வீரர்களுக்கும்,  வீரர்களிடம் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. 
பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் ஷர்மு தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.