முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2018-19ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மாவட்ட அளவில் முடிந்து, தேர்ச்சி பெற்ற 320 வீரர்கள் மற்றும் 320 வீராங்கனைகள் மாநில போட்டிக்கு அழைக்கப்பட்டனர். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து ஆட்சியர் சு. சிவராசு பேசுகையில்,
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். மேலும், முதல் 3 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.
இதனைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இப்போட்டிகளில் 32 மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். திங்ள்கிழமையும் போட்டிகள் நடைபெறும். மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தொடக்க விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பிரபு, மண்டல முதுநிலை மேலாளர் பிராங்பால் ஜெயசீலன், விளையாட்டு விடுதி மேலாளர் ஆர். ரமேஷ் மற்றும் பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


