பட்டதாரிகளை மட்டும் உருவாக்காமல், அறிவார்ந்த சமூகத்தை கட்டமைப்பதாக உயர்கல்வி இருத்தல் வேண்டும் என பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் ப. மணிசங்கர் அறிவுறுத்தினார்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் திருச்சி மண்டல அலுவலகத்தின் கீழ் இயங்கும், திருச்சி, அரியலூர், திருக்குவளை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் ப. மணிசங்கர் பேசியது: அறிவியல் மற்றும் தொழிநுட்பத் திறன் மிக்கவர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. பட்டம் பெற்று இந்த சமூகத்தில் நுழையும் மாணவர்கள் சாதி, மதம், சமயம், இனம், மொழி, பிராந்தியம் உள்ளிட்ட தடைகளை கடந்து நாட்டின் முன்னேற்றத்துக்கு அவரவர் பங்களிப்பை அளிக்க வேண்டும். அதற்கு நேர்மை, ஒருமைப்பாடு, சமநீதி, சமஉரிமை அவசியமானது. ஜனநாயக நாடான இந்தியாவில் இவற்றை உறுதி செய்யும் வகையில் உயர்கல்வி கட்டமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது உயர்கல்விக்காக சில கொள்கைகளை வகுத்து, அதன்படி கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.
பட்டதாரிகளை மட்டுமே உருவாக்காமல் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். மாணவர்களை நாட்டுப் பற்று, மனித உரிமை, சமூகப் பொறுப்பு, தனித்திறன் மேம்பாடு ஆகியவற்றில் சிறந்தவர்களாக உருவாக்குவதுடன், சிறந்த குடிமகனாக வளர்த்தெடுக்கும் வகையிலான கல்வியே அவசியமானது என்றார் அவர்.விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் ஜே. குமார், தேர்வு நெறியாளர் எம். வெங்கடேசன், திருச்சி புல முதல்வர் த. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இளங்கலை, முதுகலையில் 1,626 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மாநில அளவில் முதலிடம் பெற்ற 2 பேருக்கு நினைவுப் பரிசுகளும், துறை ரீதியாக முதலிடம் பெற்ற 32 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பல்கலைக் கழக அளவில் மதிப்பெண் பெற்ற 7 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலின், இபிஎஸ் இணைவார்கள் : ஆதவ் அர்ஜுனா
வரி அமைப்பில் மாற்றம்? பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அரசு கருத்துகேட்பு: நிர்மலா சீதாராமன்
நீட் மறுதேர்வு: மாநில முதல்வர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்!






