குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிலம்பத்தில் சாதனை படைத்த திருச்சி வீரர்கள்

சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்று திருச்சி வந்த 9 வீரர், வீராங்கனைகளுக்கு ரயில்நிலையத்தில்

Updated On :23 ஜனவரி 2019, 8:17 am IST

சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்று திருச்சி வந்த 9 வீரர், வீராங்கனைகளுக்கு ரயில்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
சர்வதேச சிலம்பப் போட்டி கோவாவில் ஜனவரி 17ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற்றது.  இதில், இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா என 12 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடினர். 
இதில், திருச்சியில் காவலர் அரவிந்திடம் பயிற்சி பெற்ற வீரர், வீராங்கணைகள் 9 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர். 
தனிப்பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மவுலின், காமேஸ்வரன், ஜீவா, ஹரிஸ்வரன் மற்றும் ஸ்ரீ பாலன் ஆகியோரும் பெண்கள் பிரிவில் ஷாலினி, சுகிதா, நவசக்தி மற்றும் ராகவி ஆகியோர் மூன்று சுற்றுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் பெற்றனர். இவர்கள் செவ்வாய்க்கிழமை காலை ரயில் மூலம் திருச்சி ரயில்நிலையம் வந்தடைந்தனர்.  வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.