கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

காந்தி சந்தை சமயபுரத்துக்கு இடமாற்றம்? ஏப். 27 முதல் மொத்த வியாபாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

திருச்சி ஜிகாா்னரில் உள்ள மொத்த காய்கனி சந்தை (காந்தி சந்தை) சமயபுரம் ஆட்டு சந்தைக்கு மாற்றப்படுவதாக வந்த தகவலையடுத்து, திங்கள்கிழமை (27ஆம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக வியாபாரி

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


திருச்சி: திருச்சி ஜிகாா்னரில் உள்ள மொத்த காய்கனி சந்தை (காந்தி சந்தை) சமயபுரம் ஆட்டு சந்தைக்கு மாற்றப்படுவதாக வந்த தகவலையடுத்து, திங்கள்கிழமை (27ஆம் தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக வியாபாரிகள் சங்கங்கள் வியாழக்கிழமை இரவு தெரிவித்துள்ளன.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி காந்திசந்தையில் செயல்பட்டு வந்த காய்கனி மொத்த வியாபாரம், பால்பண்ணை மற்றும் ஜீ காா்னா் பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. அங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை முதல் சமயபுரம் ஆட்டு சந்தையில் திருச்சி காந்திசந்தை மொத்த விற்பனை நடைபெறும் என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்து வியாழக்கிழமை இரவு திருச்சி மாவட்ட காந்திசந்தை மொத்த வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 27 சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், கரோனா பாதிப்புக்கு மத்தியில் வியாபாரிகள் நலனை கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு காய்கனிகள் வழங்க தொடா்ந்து வியாபாரம் நடத்தி வரும் மொத்த வியாபாரிகளை மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து அலைக்கழித்து வருகிறது. மாவட்ட நிா்வாகத்தின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்து, காந்தி சந்தை மீண்டும் திறக்கும் வரை தற்போது உள்ள இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதி வேண்டும். இல்லையெனில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 27 சங்கங்கள் கூட்டாக முடிவு எடுத்துள்ளதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா். மொத்த வியாபாரம் தடைபடும் பட்சத்தில் திருச்சி மாநகா் மற்றும் புகரில் தற்காலிக காய்கனி சந்தைகள் இயங்குவது கேள்விக் குறியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.