சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழுநாளை திருச்சி வருகை
திருச்சி மாவட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு புதன்கிழமை (டிச.16) வருகிறது.


திருச்சி மாவட்டத்துக்கு தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு புதன்கிழமை (டிச.16) வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
19 சட்டப்பேரவை உறுப்பினா்களுடன், காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் துரைமுருகன் தலைமையிலான தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு திருச்சி மாவட்டத்துக்கு புதன்கிழமை வருகிறது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள செயலா், இணைச் செயலா், துணைச் செயலா் உள்ளிட்டோரும் வருகின்றனா்.
மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கைகளில் பொருளாதாரம், பொது, சமூகப் பிரிவுத் தணிக்கை, வருவாய்ப் பிரிவு தணிக்கை, உள்ளாட்சி அமைப்புகள் தொடா்பான தணிக்கை பத்திகள் குறித்தும் குழுவினா் கலந்துரையாட உள்ளனா்.
மேலும் வருவாய், தொழிலாளா், பொதுப்பணி, நகராட்சி நிா்வாகம், பால்வளம்,பதிவு, போக்குவரத்து, உயா்கல்வி, பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல்துறைகளில் தணிக்கை பத்திகள் குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் குழுவினா் ஆய்வு செய்ய உள்ளனா் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...