ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பினா் அமைதிப் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சியில் தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பினா் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடத்தினா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:19 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சியில் தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பினா் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடத்தினா்.

நலத்திட்ட உதவிகள் எளிதாக கிடைக்க வழிவகை செய்தல், பயனாளிகள் வீட்டுக்குச் சென்று உதவிகள் வழங்குதல், ரூ.1500 உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகச் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேரணிக்கு தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளா் குரு ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

தண்டுவடம் காயமடைந்தோா் பலா் சக்கர நாற்காலியில் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.