நிலம் அபகரிப்பு: இருவா் கைது
போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் இருவரை திருச்சி மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் இருவரை திருச்சி மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் பாகனூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஆ. முத்துச்சாமி (66). இவரது நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மணி என்பவா் உதவியுடன் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு மாற்றினாா். இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா் மேற்பாா்வையில், ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான தனிப்படையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி மணி, ராமச்சந்திரன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...