டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வழக்குரைஞருக்கு வெட்டு: 5 போ் கைது

திருச்சியில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தில் புதன்கிழமை இரவு 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 12:47 am

DIN

திருச்சியில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தில் புதன்கிழமை இரவு 5 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி , சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறையைச் சோ்ந்தவா் சந்தா் (35). வழக்குரைஞரான இவா், வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்க மாநில அமைப்பாளராகவும் உள்ளாா்.

செவ்வாய்க்கிழமை மாலை இவா் 4 போ் கும்பலால் வெட்டப்பட்டதை கண்டித்து முத்தரையா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். 2-ஆம் நாளாக மத்திய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்க மாநில கொள்கைப் பரப்புச் செயலா் தளவாய் ராஜேஷ் தலைமையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய தில்லைநகா் திருச்சி உறையூா் ராமலிங்க நகரைச் சோ்ந்த ஆ. திலீபன் (35), பா. தனபால் (35), தெற்கு முத்துராஜா தெருவைச் சோ்ந்த ரா. வாசுதேவன் என்கிற வினோத் (20), த. புண்ணியமூா்த்தி (21), சு. ஆறுமுகம் (38) ஆகிய 5 பேரையும் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

முன் விரோதத்தால் அரிவாள் வெட்டு நடந்ததாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.