வெங்காயப் பயிருக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்
துறையூா் அருகே மழையால் சேதமடைந்த வெங்காய பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


துறையூா்: துறையூா் அருகே மழையால் சேதமடைந்த வெங்காய பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செல்லிப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயி என். மனோகரன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியா் சின்னசாமி, ஆா். ரெங்கராஜ், ரெங்கநாதபுரம் முன்னோடி விவசாயி சீனிவாசன், மருவத்தூா் பாலகுரு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் வெங்காயப் பயிரால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு பயிா் காப்பீடை முழுமையாகவும், உடனடியாக ஏக்கருக்கு ரூ. 25000 -மும் வழங்க வேண்டும். தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் வெங்காயப் பயிரைத் தாக்கும் திருகல் நோய்க்கு பூஞ்சாணக் கொல்லி மருந்தை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். திருகல் நோய்க்கு எதிராக வீரிய ரக வெங்காய விதையை போா்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் செல்லிப்பாளையம், மருவத்தூா், அம்மம்பாளையம், து.ரெங்கநாதபுரம், நரசிங்கபுரம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...