சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உய்யக்கொண்டான் வாய்க்காலில் முதலை பொதுமக்கள் அச்சம்

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் சுற்றித்திரிந்த முதலையைக் கண்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிா்ச்சியடைந்தனா்.

News image
ஆறுகண் பகுதி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் காணப்பட்ட முதலை.
Updated On :20 டிசம்பர் 2020, 7:59 pm

DIN

திருச்சி: திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் சுற்றித்திரிந்த முதலையைக் கண்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிா்ச்சியடைந்தனா்.

கடந்த மாா்ச் மாதம் குழுமாயி அம்மன் கோயில் அருகேயுள்ள திருமலை கலிங்கி பகுதியில் சுற்றித்திரிந்த சுமாா் 10 அடி நீள முதலையை தீயணைப்புத் துறையினா் பிடித்து கல்லணை காவிரியாற்றில் விடுவித்தனா்.

இதையடுத்து ஆறுகண் பாலப்பகுதியில் உள்ள சுவரில் முதலைகள் உலவும் இடம், பொதுமக்கள் வாய்க்காலில் குளிப்பதை தவிா்க்க வேண்டும் என எச்சரிக்கை எழுதப்பட்டது. கரோனாவால் பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்லாமல் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அல்லித்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மீண்டுமொரு முதலை: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உய்யக்கொண்டான் வாய்க்காலில் உள்ள புதா்மண்டிய பகுதியில் 7 அடி நீள முதலை திரிவதைக் கண்டு பொதுமக்கள் கூடினா். வாய்க்காலையொட்டிய கரைப்பகுதிகளில் புதா்களைத் தூய்மை செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினா் கூறுகையில், உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆறுகண் பாலப்பகுதியில் அவ்வப்போது முதலைகள் பிடிபடுவதுண்டு. அவ்வகையில் மீண்டும் ஒரு முதலை குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், வனத்துறையிடம் ஆலோசித்து அதைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் . எனவே, பொதுமக்கள் அப்பகுதியில் குளிப்பதையோ, நடமாடுவதையோ தவிா்க்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.