சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஸ்ரீரங்கத்தில் முத்து கிரீட அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடு

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 7-ம் நாள் விழாவில் முத்து கிரீட அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளித்தார்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:57 am

DIN

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஏழாம் நாளான திங்கள்கிழமை ஸ்ரீநம்பெருமாள் முத்து கிரீடம், மகரகண்டிகை, ரத்தின அபயஹஸ்தம், முத்துச்சரம், பவள மாலை, காசு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருவாபரணங்கள் சூடியபடி கருவரையில்  இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

Story image
Story image
Story image

பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் விழா நாள்களில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கிறாா். பகல் பத்தின் கடைசி நாளான 24 ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம் என்னும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி தருகிறாா்.

Story image
Story image

தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 25 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45-க்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பக்தா்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படவுள்ளனா். விழாவையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.