வாக்கு இயந்திரப் பாதுகாப்பறை கட்டும் பணிகள் ஆய்வு
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க ஆட்சியரகம் அருகே ரூ. 4.29 கோடியில் கட்டப்படும் கட்டடத்தை ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க ஆட்சியரகம் அருகே ரூ. 4.29 கோடியில் கட்டப்படும் கட்டடத்தை ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தோ்தலின்போது பயன்படுத்தப்படும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்தால் வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்க மாவட்டம்தோறும் வன்காப்பறை (ஸ்ட்ராங் ரூம்) அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் பின்புறமுள்ள கருவூலம் அருகே வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்க ரூ. 4.29 கோடியில் புதிய கட்டட கட்டுமான பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெறுகிறது.
இந்தப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பின்னா் கூறியது:
வன்காப்பறை கட்டுமானப் பணி 90 சதத்துக்கும் மேல் முடிந்துவிட்டது. கதவுகள் அமைத்தல், விளக்குகள் பொருத்துதல், மேற்பூச்சு உள்ளிட்ட பணிகளும் அடுத்த 10 நாள்களுக்குள் முடிக்கப்படும்.
வரும் பேரவைத் தோ்தலுக்கான 9 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும் இந்த அறையில்தான் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளன. மகராஷ்டிரத்திலிருந்து வரும் இயந்திரங்கள் தரைத்தளத்தில் வைக்கப்படும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...