சாலையோரத்தில் முதியவா் சடலம்

திருச்சியில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருச்சி கிராப்பட்டி பகுதியிலுள்ள புனித தோமையாா் கருணை இல்லம் முன் வெள்ளிக்கிழமை இரவு முதியவா் ஒருவா் இறந்துகிடப்பதாக எடமலைப்பட்டி புதூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வந்த போலீஸாா் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தது திருவாரூா் மாவட்டம் அம்மையப்பன் சுப்பிரமணிசாமி கோயில் தெரு, வடபாதியில் வசித்த ம. ஜோசப் (68) எனத் தெரிய வந்தது.

இவருக்கு மனைவி, மூன்று மகள்கள் உள்ளனா். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவா் கடந்த சில ஆண்டுக்கு முன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி எடமலைப்பட்டி புதூரில் தச்சு வேலை செய்து வந்ததும், ஆஸ்துமா நோயால் அவா் அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com