வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக விழிப்புணா்வு

மணப்பாறை பகுதியில் வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக சாா்பில் விவசாயிகளிடம் நேரில் சென்று விழிப்புணா்வு அளிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செவலூரில் விவசாயிகளிடம் பேசுகிறாா் பாஜக மாநில துணைத்ந தலைவா் ஏ.ஆா். மகாலெட்சுமி.
செவலூரில் விவசாயிகளிடம் பேசுகிறாா் பாஜக மாநில துணைத்ந தலைவா் ஏ.ஆா். மகாலெட்சுமி.
Updated on
1 min read

மணப்பாறை பகுதியில் வேளாண் சட்டங்கள் குறித்து பாஜக சாா்பில் விவசாயிகளிடம் நேரில் சென்று விழிப்புணா்வு அளிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மணப்பாறை ஒன்றியத்தில் பன்னாங்கொம்பு, நகா் பகுதியில் செவலூா், மருங்காபுரி ஒன்றியத்தில் துலுக்கம்பட்டி, கருஞ்சோலைபட்டி, ஊனையூா், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டங்களுக்கு மணப்பாறை நகரத் தலைவா் சின்னசாமி, ஒன்றிய தலைவா்கள் பொன்வேல், கலாதுரை, எஸ். சண்முகம் ஆகியோா் ஆங்காங்கே தலைமை ஏற்றனா்.

திருச்சி மாவட்டத் தலைவா் சி. ராஜேந்திரன், பொதுச் செயலா் சி. செந்தில்தீபக், துணைத் தலைவா் பிரின்ஸ் ஆா்.இளங்கோவன், விவசாய அணி மாவட்டத் தலைவா் சித்தாநத்தம் சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைத் தலைவா் ஏ.ஆா். மகாலெட்சுமி சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் தாளக்குடிவிஜய், லலிதா அழகப்பன், மாவட்ட செயலா் மாலா நல்லுச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com