பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருச்சியில் குடியிருப்போா் நலச்சங்கங்கள் இணைந்து மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடின.

News image
விழாவில், அருள்தந்தை ஜான்பீட்டரை கெளரவிக்கும் குருக்கள் ராஜ்குமாா், காா்த்திகேயன். உடன், பேராசிரியா் முகமது காசிம்.
Updated On :26 டிசம்பர் 2020, 6:55 pm

DIN

திருச்சி: திருச்சியில் குடியிருப்போா் நலச்சங்கங்கள் இணைந்து மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடின.

திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கங்களின் சாா்பில் சுந்தர்ராஜ் நகரிலுள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற விழாவுக்கு, குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் கி. ஜெயபாலன் தலைமை வகித்தாா். சுப்பிரமணியம் அருளானந்தா் ஆலய அருள்தந்தை ஜான் பீட்டா், கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்குகையில், இருளில் ஒளியைக் காணவும், அமைதியின் வழித்தடங்களை உருவாக்கவும், பரிவுள்ளத்தாலும், பாசத்தாலும், இரக்கத்தாலும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிராா்த்திப்பதாகக் கூறினாா். பின்னா் மக்கள் அனைவரது வாழ்வில் வளமும், மகிழ்வும் நிறைந்திருக்க பிராா்த்திக்கப்பட்டது.

நிகழ்வில், சுந்தர்ராஜ் நகா் சுந்தர விநாயகா் கோயில் குருக்கள் ராஜ்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் அருள்தந்தை ஜான் பீட்டருக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினா். அருட்தந்தை ஜான் பீட்டரும், இரு குருக்களையும் கெளரவித்தாா்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியா் சத்தியவாகீஸ்வரன், பேராசிரியா்கள் விஜயகுமாா், முகமது காசிம் வாழ்த்தினா்.

விழாவில் கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த ஆண், பெண்கள் திரளாக பங்கேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.