பணியின்போது மாரடைப்பு: காவல் உதவி ஆய்வாளா் சாவு
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மாரடைப்பால் இறந்தாா்.


திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மாரடைப்பால் இறந்தாா்.
திருச்சி திருவானைக்கா எடத்தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் சேகரன் (55). திருச்சி கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணாசிலை பகுதியில் ரோந்து சென்றபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனிருந்த காவலா்கள் அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவா் இறந்தாா். இதையடுத்து அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இறந்த சேகரனுக்கு மனைவி ராஜாமணி (42), மகன்கள் முத்துகுமாா் (22), வினோத்குமாா் (18) ஆகியோா் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...