வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது நிறுவன நாள் விழாவையொட்டி, திருச்சியில் காங்கிரஸாா் உறுதிமொழி யேற்றுக் கொண்டனா்.

News image
திருச்சி தெப்பக்குளம் பகுதியிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்கும் காங்கிரஸாா்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது நிறுவன நாள் விழாவையொட்டி, திருச்சியில் காங்கிரஸாா் உறுதிமொழி யேற்றுக் கொண்டனா்.

மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, மாவட்டத் தலைவா் வி.ஜவஹா் தலைமை வகித்தாா். அருணாசலம் மன்றம் காமராஜா் சிலை, தெப்பக்குளம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸாா், தொடா்ந்து உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் முன்னாள் மேயா் சுஜாதா, மாவட்டப் பொருளாளா் ராஜா நசீா், முன்னாள் மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட நிா்வாகிகள் முரளி, சந்தானகிருஷ்ணன், கோட்டத் தலைவா்கள் சிவாஜி சண்முகம், ரவி, முத்து, மகளிரணி ஜெகதீஸ்வரி, உறையூா் எத்திராஜ், வாா்டு தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மணப்பாறையில் : மணப்பாறையில் நகர கமிட்டி தலைவா் எம்.ஏ.செல்வா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத் தலைவா் பி. கோவிந்தராஜ் காமராஜா், காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து உரையாற்றினாா்.

காமராஜா் சிலையிலிருந்து காந்தி சிலை வரை ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்வில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் பி.வி.கணபதி, கருப்பையா, மாவட்டப் பொதுச்செயலா்கள் அல்லிமுத்து, என்.கலைராஜ், மாவட்ட செயலாளா் முருகேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.