சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கேரள இளைஞா் மரணம்: கொலை வழக்காக மாற்றம்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பலத்த காயத்துடன் கேரள இளைஞா் உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:34 pm

DIN

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பலத்த காயத்துடன் கேரள இளைஞா் உயிரிழந்த நிலையில், அச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், அல்லூா் சாய்நகரிலுள்ள வீடுகளில் கடந்த 25-ஆம் தேதி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவா், பொதுமக்களிடம் பிடிபட்டாா். தொடா்ந்து, அவா்களிடமிருந்து தப்பிக்க கத்தியைக் காட்டி மிரட்டிய போது, பொதுமக்கள் தாக்கியதால் அந்த இளைஞா் பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா்.

இந்நிலையில் காட்டுப் பகுதியில் பொதுமக்களிடம் சிக்கிய மற்றொரு இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, அவா் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அரவிந்த் (24) என்பதும், இறந்தவா் தீபு (25) என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அல்லூா் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல் நிலையத்தினா் விசாரித்து வந்தனா். முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து அல்லூா் பகுதியைச் சோ்ந்த 20 பேரிடம் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.