சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.19 கோடி

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல்கள் மூலம், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1.19 கோடி வரப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல்கள் மூலம், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1.19 கோடி வரப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில், உதவி ஆணையா்கள் திருவானைக்கா அகிலாண்டேசுவரி திருக்கோயில் செ. மாரியப்பன், உறையூா் வெக்காளியம்மன் சு. ஞானசேகா், சமயபுரம் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் ஆகியோா் மேற்பாா்வையில், உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ரூ.1.19 கோடி ரொக்கம், 1 கிலோ 866 கிராம் தங்கம், 5 கிலோ 222 கிராம் வெள்ளி, 22 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com