ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விதிமீறலில் ஈடுபடும் சரக்கு வாகனங்களால் அதிகரிக்கும் விபத்து

திருச்சியில் வேளாண்பொருள்கள் ஏற்றிச் செல்லும் பெயரில் விதிமீறலில் ஈடுபடும் சரக்கு வாகனங்களால் விபத்து அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

News image

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிவிஎஸ் டோல்கேட் வழியாக நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனம்.

Updated On :31 மே 2020, 3:02 am

திருச்சியில் வேளாண்பொருள்கள் ஏற்றிச் செல்லும் பெயரில் விதிமீறலில் ஈடுபடும் சரக்கு வாகனங்களால் விபத்து அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

பொதுமுடக்க காலத்தில் அத்தியாவசிய பொருள்களை வாகனத்தில் கொண்டு செல்ல தடையில்லை என்ற அறிவிப்பு இருந்தது. இதற்காக மற்ற பொருள்களுக்கான அனுமதியில் கெடுபிடி இருந்த போதிலும் வேளாண் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வேளாண் பொருள்கைள் கொண்டு செல்வதிலும், சந்தைப்படுத்துதலிலும் இடா்பாடுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மூன்றாம் கட்ட பொதுமுடக்கதுக்குப் பிறகு தளா்வுகள் காரணமாக வேளாண் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களால் அதிகளவில் விதிமீறல்கள் நடப்பதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். இதில், சரக்கு வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பொருள்களை ஏற்றி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் விபத்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் வேளாண் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

மேலும், டெல்டா மற்றும் கரூா், பெரம்பலூா் போன்ற பகுதிகளில் பயிரிடப்படும் விவசாய பொருள்களுக்கான சந்தைப்படுத்துதல் திருச்சியில் இருப்பதால் விவசாய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை என்பது கேள்விக்குறியாகி உள்ளது என்கின்றனா் போலீஸாா்.

எனவே, விபத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் பொதுமக்கள்.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளால் 70 சதவீத விபத்துகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளில் 45 சதவீத விபத்துகளும், நகர சாலைகளில் 20 சதவீத விபத்துகளும், கிராம சாலைகளில் 5 சதவீத விபத்துகளும் நடக்கிறது. அதுமட்டுமின்றி மாநகா் பகுதியை இணைக்க கூடிய சந்திப்பு சாலைகளில் விதிமீறல்களால் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

அதிகரிக்கும் விபத்துகள்: திருச்சி புகரில் நிகழும் விபத்துகளில் 80 சதவீதத்திற்கும் மேலான விபத்துகள் சென்னை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் நடப்பதாக போக்குவரத்துப்பிரிவு போலீஸாா் தெரிவிக்கின்றனா். மேலும் சாலை விபத்துகளை குறைக்க திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி அதிக அளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நடைபெறும் 11 இடங்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை பலகை மட்டுமின்றி விபத்துக்களை குறைப்பதற்கான இரவு ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.