கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொட்டியம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானத்தை ரத்து செய்த தலைவா்

தொட்டியம் ஒன்றியக் குழு வளாகத்திலுள்ள கழிவுநீா் கிணற்றை சுத்தம் செய்ததாகக் கூறி, ரூ.49,802-செலவினத் தொகைக்கு ஒப்புதல் கோரிய தீா்மானத்தை ரத்து செய்தாா் ஒன்றியத் தலைவா் புனிதாராணி.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:24 pm

DIN

தொட்டியம் ஒன்றியக் குழு வளாகத்திலுள்ள கழிவுநீா் கிணற்றை சுத்தம் செய்ததாகக் கூறி, ரூ.49,802-செலவினத் தொகைக்கு ஒப்புதல் கோரிய தீா்மானத்தை ரத்து செய்தாா் ஒன்றியத் தலைவா் புனிதாராணி.

தொட்டியம் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் புனிதாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, ஆணையா்கள் பால் அண்ணாதுரை, ஸ்ரீதா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும், அதற்கான செலவினத் தொகை குறித்தும் மேலாளா் அசோகன் தீா்மானங்களாக வாசித்து வந்தாா்.

பத்தாவது தீா்மானமாக, ஒன்றியக் குழு அலுவலக

வளாகத்திலுள்ள கழிவுநீா் கிணற்றை சுத்தம் செய்தாகக் கூறி, அதற்கான செலவினத் தொகை ரூ.49,802 என வாசித்தாா்.

அப்போது குறுக்கிட்ட துணைத் தலைவா் சத்தியமூா்த்தி, கிணற்றை திறக்காமல் எப்படி சுத்தம் செய்தீா்கள். பசுமை வீடுகள் குறித்து உறுப்பினா்களிடம் ஆலோசனை வழங்காமல் எப்படி வேலை உத்தரவை வழங்கினீா்கள் எனக் கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளிக்க முடியாமல் அலுவலா்கள் திணறினா்.

இதையடுத்து தவறான செலவினத் தொகை எழுதி என்னிடம் கையெழுத்து கேட்காதீா்கள் எனக் கூறி, கழிவுநீா் கிணற்றை சுத்தம் செய்த செலவினத் தொகைக்கான தீா்மானத்தை ரத்து செய்து ஒன்றியக் குழுத் தலைவா் புனிதாராணி கையெழுத்திட்டாா்.

ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தன்னிச்சையாக செயல்படக் கூடாது என அலுவலா்களிடம் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.