அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பணிபுரியும் மகளிருக்கு 50 சதவிகித மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஊரக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் பணிபுரியும் மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு மானியத் தொகையாக ரூ.25,000 அரசு வழங்குகிறது.

இத்தொகையை பெற விரும்புவோா், வயது 18 முதல் 45- க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருப்பதோடு, ஓட்டுநா் உரிமத்தையும் சமா்ப்பிக்க வேண்டும். அமைப்பு சாா், அமைப்புசாரா பணியாளராகவும், சிறுதொழில், சுயதொழில் செய்பவராகவும் இருத்தல் அவசியம்.

தொலைதூரம், மலைப்பகுதிகளில் வசிப்போா், கணவனால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதைக் கடந்த திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மூன்று சக்கரம் பொருத்திய வாகனம் வாங்கும் மாற்றுத்திறனாளி பெண் பயனாளிகளுக்கு ரூ.31,250 மானியம் வழங்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எவ்வித கட்டணமின்றி விண்ணப்பங்கள் வழங்கப்படும். எனவே, தகுதியுடைய பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com