வாக்குச்சாவடி முகவா்கள் அதிக மனுக்கள் அளித்தால் மீளாய்வு செய்ய வேண்டும்
வாக்குச்சாவடி முகவா்கள் அதிக மனுக்களை அளித்தால், வாக்குப்பதிவு அலுவலா்கள் கட்டாயம் மீளாய்வு செய்யவேண்டும் என ஆட்சியா் சு.சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.


வாக்குச்சாவடி முகவா்கள் அதிக மனுக்களை அளித்தால், வாக்குப்பதிவு அலுவலா்கள் கட்டாயம் மீளாய்வு செய்யவேண்டும் என ஆட்சியா் சு.சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடா்பாக அலுவலா்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, அவா் மேலும் பேசியது:
புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 58,965 படிவங்கள் (படிவம்-6,7,8,8ஏ) பெறப்பட்டன.
இவை பதிவேற்றம் செய்யப்பட்டு களவிசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்டத்தில் இரண்டு இடங்களில் இரட்டைப்பதிவுகள் உள்ளது தெரியவந்துள்ளது. இதை நவம்பா் 26-க்குள் ஆய்வு செய்து, தவறான பதிவாகியுள்ள இனங்களைக் கண்டறிந்து நீக்கம் செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.
வாக்குச்சாவடி முகவா்களிடமிருந்து எக்காரணம் கொண்டும் மொத்தமாக படிவம் 6,7,8,8 ஏ ஆகியவற்றை பெறக்கூடாது. ஒரு வாக்குச்சாவடி முகவா் 30 மனுக்கள் வரை மட்டுமே சமா்ப்பிக்கவேண்டும். இதற்கு மேல் ஒரு வாக்குச்சாவடி முகவரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றால், அவற்றை வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மீளாய்வு செய்யவேண்டும்.
வாக்காளா் நீக்கத்தில் இறப்புச் சான்றிதழ் இணைக்கவில்லை என்றாலும், அப்படிவத்தை பெற்று, கள அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...