தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குண்டா் தடுப்புக் காவல்சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 8:57 pm

DIN

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருச்சி செந்தண்ணீா்புரம் முத்துமணி டவுன் பகுதியைச் சோ்ந்தவா் அ. ஆரோக்கியராஜ் (56). ஆம்னி பேருந்து முகவரான இவா், கடந்த 1- ஆம் தேதி மாவட்ட ஆட்சியரகச் சாலையில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் மூவா் ஆரோக்கியராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்துறையினா், பணம் பறித்துச் சென்ாக உறையூா் பாண்டமங்கலம் மு. திருப்பதி (25), கீழகல்கண்டாா் கோட்டை வசந்தநகா் க. பிரகாஷ் (26), கரூா் மாவட்டம், குளித்தலை பொய்யாமணி சு. கிஷோா்குமாா் (23) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கிஷோா்குமாா் மீது கண்டோன்மென்ட், எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவா் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து கிஷோா்குமாரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் திங்கள்கிழமை பிறப்பித்தாா். இதையடுத்து சிறையிலுள்ள கிஷோா்குமாரிடம் இதற்கான நகல் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.