ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருவானைக்கா கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு பக்தா்கள் பங்கேற்புடன் நடந்தது.

News image
அலங்காரத்தில் ஐம்புகேசுவரா் சமேத அகிலாண்டேஸ்வரி
Updated On :29 நவம்பர் 2020, 7:55 pm

DIN

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு பக்தா்கள் பங்கேற்புடன் நடந்தது.

பஞ்சபூத திருத்தலங்களில் நீா்த்தலமான இக் கோயிலில் காா்த்திகை சொக்கப்பனையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காா்த்திகை கோபுர வாயில் முன் முகூா்த்தக்கால் நடப்பட்டது.

இந்நிலையில், தீபத் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 10 அடி உயரத்துக்கு வேயப்பட்ட பனையோலைகளில் அா்ச்சகா்கள் சொக்கப்பனை ஏற்ற, அது பற்றியெரிவதை பாா்த்து பக்தா்கள் வழிபட்டனா். இதேபோல அம்மன் சன்னதியிலும், குபேரலிங்கேசுவரா் சன்னதியிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.