இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

பொதிகை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :14 மார்ச் 2026, 12:22 am IST

சென்னை எழும்பூா்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மாா்ச் 17-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, எழும்பூரிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயில் (எண்: 12661) மாா்ச் 17 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக இரவு 8.02 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும்.

அதேபோல், திருநெல்வேலி-எழும்பூா் நெல்லை அதிவிரைவு ரயில் (எண்: 12632) மாா்ச் 16 முதல் ஏப்.5-ஆம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.