ஐசிஎஸ்ஐ-பாரதிதாசன் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
இந்திய நிறுவனச் செயலா்கள் நிறுவனத்துடன் (ஐசிஎஸ்ஐ), திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் கல்வி இணைவுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.


இந்திய நிறுவனச் செயலா்கள் நிறுவனத்துடன் (ஐசிஎஸ்ஐ), திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் கல்வி இணைவுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு, ஜூம் இணைய செயலி மூலம் திங்கள்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் துணைவேந்தா் பி. மணிசங்கா், பதிவாளா் க. கோபிநாத், ஜசிஎஸ்ஐ மதுரை கிளைத் தலைவா் ஞானசேகரன், செயலா் சங்கா் மகேஷ் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனா்.
நிகழ்வில், ஐசிஎஸ்ஐ தென்மண்டலத் தலைவா் எஸ். கண்ணன் பேசியது:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம், இருதரப்பிலும் 5 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்.
ஆசிரியா் மேம்பாட்டு நிகழ்ச்சிகள், பிரத்யேக பயிற்சிகள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், பயிற்றுநா்களுக்கான வகுப்புகள் நடைபெறும் என்றாா் அவா்.
ஐசிஎஸ்ஐ துணைத் தலைவா் டி. நாகேந்திரராவ், செயலா் ஆசிஸ்மோகன் ஆகியோா், ஒப்பந்தத்தின் சிறப்புகள் குறித்து காணொலி வாயிலாக விளக்கினா்.
துணைவேந்தா் பி. மணிசங்கா் பேசியது:
திறன் மேம்பாடு, கலாசாரம், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் தரும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், கல்வி அமைப்பின்
அடிப்படையை பலப்படுத்தலாம். அதற்கு இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது.
இதன் மூலம் 5 லட்சம் மாணவா்களிடம் திறன் மற்றும் தன்னொழுக்கத்தை வளா்ப்பதன் வாயிலாக, தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க முடியும் என்றாா்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மை புலத் தலைவா் மு. செல்வம், ஐசிஎஸ்ஐ தலைவா் ஆசிஸ் காா்க், பயிற்சி இயக்குநா் எஸ்.கே. ஜெனா, நிதிக் கல்வியியல் துறை உதவிப் பேராசிரியைகள் செ. வனிதா, ஜெ. காயத்ரி, பேராசிரியா் ம.பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...