திருச்சியில் படைக்கலன் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி தொழிலாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி திருச்சியில் உள்ள படைக்கலன் மற்றும் கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலைகளிலும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படைக்கலன் தொழிற்சாலையில் கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன், கனரக ஊடுருவி தொழிற்சாலையில் பிரபாகரன், இரணியன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி அங்கு பலத்த காவல்துறைவினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...