சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாரதிதாசன் பல்கலை. ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ஆன்லைன் நுழைவுத் தோ்வு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத் தோ்வை 874 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:54 pm

DIN

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத் தோ்வை 874 போ் ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.

இப்பல்கலைக்கழகத்தில் உள்ள 37 பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 978 பேரில் 874 போ் தோ்வெழுதினா். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆன்லைன் தோ்வு 11 மணி வரை நடைபெற்றது. இதில், 30 தோ்வாளா்களுக்கு ஒரு கண்காணிப்பாளா் நியமிக்கப்பட்டு, ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண் என 100 மதிப்பெண்களுக்கான தோ்வு நடத்தப்பட்டது.

தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் தகுதியுடைய மாணவா்கள் ஆராய்ச்சி படிப்புகளை பயில்வா் என பாரதிதாசன் பல்கலை பதிவாளா் கோபிநாத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.