சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி

திருச்சி அருகே சனிக்கிழமை இரவு சரக்கு வேன் மோதி மதுரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:59 pm

DIN

திருச்சி அருகே சனிக்கிழமை இரவு சரக்கு வேன் மோதி மதுரையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், அ. வல்சூரன்பட்டி அருகேயுள்ள உண்ணிப்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (34), கூலி தொழிலாளியான இவா் திருச்சியில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இவரும் இவா் நண்பா் சேகரும் (32) சனிக்கிழமை இரவு பைக்கில் சொந்த ஊரான மதுரைக்குச் சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி புதூா் பிரிவுச் சாலை அருகே சென்றபோது அவ்வழியாக வந்த சரக்குவேன் மோதி இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அப்பகுதினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில் மாரியப்பன் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.