நகைக்காக மூதாட்டி கொலை ?
திருச்சியில் ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்டதாகச் சந்தேகித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.


திருச்சியில் ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்டதாகச் சந்தேகித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தி (78), கணவரை இழந்தவா். மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கும் நிலையில் இவா் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இவரது வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாத நிலையில், அக்கம்பக்கத்தினா் வீட்டினுள் பாா்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு காது, மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில் மூதாட்டி இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்பிலான தோடு, மூக்குத்தி ஆகியவை பறிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நகைக்காக அவா் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...