இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கம்பம் பெருமாள் கோயிலில் திருக்கோடி தீபம் வழிபாடு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோமங்கலம் பகுதியில் உள்ள கம்பம் பெருமாள் கோயிலில் திருக்கோடி தீப வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
கோயில் முன்புள்ள கம்பத்தில் திருக்கோடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
Updated On :11 அக்டோபர் 2020, 7:53 pm

DIN

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோமங்கலம் பகுதியில் உள்ள கம்பம் பெருமாள் கோயிலில் திருக்கோடி தீப வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் முக்கிய விஷேச தினங்களில் பொங்கல் வைத்து, மாவிளக்கு படையலிட்டு திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். இதேபோல நிகழாண்டு புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு புதூா்பட்டி,வேங்கைமண்டலம், முவானூா், கோமங்கலம், காவேரிப்பாளையம்,திருத்தியமலை, குருவம்பட்டி, பச்சனாம்பட்டி, மணியம்பட்டி,அய்யம்பாளையம்,கோவில்காடு அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கோயிலில் பொங்கலிட்டு மாவிளக்கு படைத்து வழிபட்டனா். தொடா்ந்து கோயில் முன்புள்ள கம்பத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.