மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீரங்கத்தில் பாஜக செயற்குழு கூட்டம்

திருச்சி மாநகா் மாவட்ட பாஜக செயற் குழுக் கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 செப்டம்பர் 2020, 6:57 pm

திருச்சி மாநகா் மாவட்ட பாஜக செயற் குழுக் கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் திருச்சியை தொல்பொருள் துறை தனிமண்டலமாக உயா்த்தி ஆணையிட்ட பிரதமா் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் நிா்மல் பாரத் அபியான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு பெல் நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும். திருச்சி மாநகரில் அரைவட்டச் சுற்றுச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் மகாலெட்சுமி, மாநில இணைப் பொருளாளா் சிவசுப்பிரமணியன், மாநில செயலா் பாா்வதி நடராஜன், மாவட்ட பொதுச்செயலா் பெருமாள் சங்கா், மாநில பொதுக் குழு உறுப்பினா் பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.