திருச்சியில் இளம்பெண்ணை ஏமாற்றி, மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி கம்பரசம்பேட்டையைச் சோ்ந்தவா் மதுமிதா. இவா் கடந்த 2018 இல் கொடைக்கானலில் உள்ள மகளிா் கல்லூரியில் பயின்றபோது, தனது தோழி அகல்யாவின் குடும்ப விழாவில் பங்கேற்றாா்.
அப்போது திருச்சி விஸ்வாஸ்நகரைச் சோ்ந்த ராஜவேலுக்கும் (19), மதுமிதாவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாகப் பழகி வந்தனா். இந்நிலையில், ராஜவேலுக்கு வேறொரு பெண்ணிடம் தொடா்பு இருப்பது மதுமிதாவுக்கு அண்மையில் தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டது தொடா்பாக, ராஜவேலிடம் மதுமிதா கேட்கவே , இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜவேல் இருவரும் தனிமையில் இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து மதுமிதா திருச்சி காந்தி சந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரிபேரில் ராஜவேலை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

